பயன்பாட்டு கொள்கைகள்தனியுரிமைக் கொள்கைCopyright & Licensing Notice

பயன்பாட்டு கொள்கைகள்

நடைமுறைக்கு வரும் தேதி: 1st ஜூலை 2022

இந்த தகவல் சேகரிப்பு மற்றும் சரிபார்ப்பு வலைதளம், இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்(MeitY) கீழ் உள்ள தேசிய மொழிபெயர்ப்பு இயக்கமான பாஷினி(Bhashini)-யால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு திறந்த மூல பயன்பாடு (Open Source Application) ஆகும். பேச்சை அறிந்து கொள்வது (Speech Recognition), எழுத்துகளை பேச்சாக மாற்றுவது(Text-to-Speech), இயந்திர மொழிபெயர்ப்பு(Machine Translation) மற்றும் ஒளியியல் எழுத்துருக்களை அடையாளம் காண்பது(Optical Character Recognition) போன்ற தொழில்நுட்பங்களை இந்திய மொழிகளுக்கு உகந்ததாக மேம்படுத்துவதற்கு தேவையான தரவுகளை பதிவு செய்வதற்காக பொதுமக்களை வரவேற்கும் நோக்கில் இந்த வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. (“நோக்கம்”).

இந்தியர்கள் இந்த வலைதளத்துக்கு பின்வரும் வகையில் பங்களிக்கலாம்:

  1. 1. திறந்த மூல எழுத்துகளை பேச்சாக மாற்றும் தொழில்நுட்ப கருவிகளை வடிவமைக்கும் நோக்கத்துடன், பலதரப்பட்ட குரல் பதிவுகளின் திறந்த தரவுதளத்தை(open database) உருவாக்க, உரை தூண்டி(prompted text)களை (“Voice Recordings”) வாசித்து, தங்கள் குரலை போலோ இந்தியா பக்கத்தில்(Bolo India page) பதிவு செய்யலாம்.
  2. 2. குரல் பதிவுகளின் திறந்த தரவுதளம் மற்றும் அதற்கேற்ற எழுத்துப்படிகளை உருவாக்க, ஒலி துணுக்கு(audio clip)களைக் கவனித்து, அவற்றை சுனோ இந்தியா பக்கத்தில்(Suno India page) எடுத்தெழுதலாம்(“Transcribed Texts”). இவற்றை திறந்த மூல எழுத்துகளை பேச்சாக மாற்றும் (open source text-to-Speech) தொழில்நுட்ப கருவிகளை வடிவமைப்பதற்கு பயன்படுத்த முடியும்.
  3. 3. இணையான மொழிபெயர்ப்புகளுக்கான திறந்த தரவுதளத்தை உருவாக்க, லிக்கோ இந்தியா பக்கத்தில்(Likho India page) ஒரு உரையை ஒரு இந்திய மொழியிலிருந்து மற்றொரு இந்திய மொழிக்கு மொழிபெயர்க்கலாம்(“Translated Texts”).
  4. 4. ஒளியியல் எழுத்துருக்களை அடையாளம் காண (Optical Character Recognition) தேவையான முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களின் திறந்த தரவுதளத்தை உருவாக்க, தேக்கோ இந்தியா பக்கத்தில்(Dekho India page), படத்தில் உள்ள உரையை வாசித்து ஒரு படத்தை முகப்பு அடையாளம் இடலாம் (“Labelled Images”).

“நீங்கள்”(“you”) மற்றும் “உங்களுடைய”(“your”) எனும் சொற்கள் இந்த வலைதளத்தை அணுகும், பயன்படுத்தும் அல்லது பங்களிக்கும் நபர்களைக் குறிக்கும் (“பயனர்”). அவ்வப்போது திருத்தப்படும் இந்த பயன்பாட்டு விதிமுறைகள், பயனர்களின் வலைதள பயன்பாட்டை நிர்வகிக்கிறது. (“விதிமுறைகள்”).

இந்த வலைதளத்தை பயன்படுத்துவதன் மூலம், மேற்கூறிய விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் மற்றும் உடன்படுகிறீர்கள்.

1. அணுகல் மற்றும் பயன்பாடு
  1. (a) இந்த வலைதளத்தில் பயனர்கள் தங்கள் குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட (transcripted ) உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட (translated) உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் (label) இடப்பட்ட படங்களை பதிவு செய்யலாம்.
  2. (b) 18 வயதுக்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் இந்த தளத்துக்கு பங்களிக்கலாம். நீங்கள் 18 வயதுக்கு குறைவானவராக இருந்தால் உங்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் பங்களிக்கலாம். மேலும் இந்த இணையதளத்துக்கான உங்களுடைய பங்களிப்பை அவர்கள் மேற்பார்வை செய்ய வேண்டியது அவசியம்.
  3. (b) 18 வயதுக்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் இந்த தளத்துக்கு பங்களிக்கலாம். நீங்கள் 18 வயதுக்கு குறைவானவராக இருந்தால் உங்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் பங்களிக்கலாம். மேலும் இந்த இணையதளத்துக்கான உங்களுடைய பங்களிப்பை அவர்கள் மேற்பார்வை செய்ய வேண்டியது அவசியம்.
  4. (b) 18 வயதுக்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் இந்த தளத்துக்கு பங்களிக்கலாம். நீங்கள் 18 வயதுக்கு குறைவானவராக இருந்தால் உங்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் பங்களிக்கலாம். மேலும் இந்த இணையதளத்துக்கான உங்களுடைய பங்களிப்பை அவர்கள் மேற்பார்வை செய்ய வேண்டியது அவசியம்.
  5. (b) 18 வயதுக்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் இந்த தளத்துக்கு பங்களிக்கலாம். நீங்கள் 18 வயதுக்கு குறைவானவராக இருந்தால் உங்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் பங்களிக்கலாம். மேலும் இந்த இணையதளத்துக்கான உங்களுடைய பங்களிப்பை அவர்கள் மேற்பார்வை செய்ய வேண்டியது அவசியம்.
2. குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களுக்கு ஒருவரின் தன்னார்வ பங்களிப்பு
  1. (a) இந்த வலைதளத்துக்கு குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள் ஆகியவற்றை பங்களிக்கும் பயனர்கள் தங்களுடைய குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி பயன்படுத்துவதற்கு, க்ரியேட்டிவ் காமன்ஸ் தன்னார்வ பங்களிப்பின் விதிமுறைகளை terms of voluntary contribution in the Creative Commons ஏற்றுக் கொள்கின்றனர்.
  2. (b) குரல் பதிவுகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள் திரையில் காண்பிக்கப்படும் உரை தூண்டி(text prompt)களை மட்டுமே கொண்டிருப்பதை பயனர்கள் உறுதி செய்ய வேண்டும். இதேபோல, படியெடுக்கப்பட்ட உரைகளும் பயனர்கள் கேட்கும் ஒலித்ததில் (audio) இடம்பெறும் உரைகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
  3. பின்வரும் குரல்பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களைப் பங்களிப்பதற்கு பயனர்களுக்கு அனுமதி இல்லை.
    1. (i) சட்டத்துக்கு புறம்பானவை, ஒரு நியாயமான நபரின் ஆட்சேபத்துக்குரியவை, அவமதிப்பு செய்யத்தக்கவை, ஆபாசமான, அச்சுறுத்தக்கூடியவை, வெறுக்கத்தக்கவை, இனரீதியாக புண்படுத்தக்கூடியவை அல்லது பொருத்தமற்றவை; அல்லது
    2. (ii) வயது வராதவர்கள் உட்பட பிற நபர்களுக்கு ஊறு விளைவிப்பவை; அல்லது
    3. (iii) பயனர்களின் தனிப்பட்ட தரவு அல்லது தகவல்கள் மற்றும் நுண்ணிய தகவல்களை உள்ளடக்கியவை.
  4. (c) பிரிவு (c) -இல் குறிப்பிடப்பட்டுள்ள வகையைச் சேர்ந்த குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள் ஆகியவை வலைதளத்தில் இருந்து நீக்கப்படும் மற்றும் வலைதள தரவுதொகுப்பு களஞ்சியத்தின் ஒரு பகுதியாக அவை இருக்காது.
  5. (d) உங்களால் இந்த உத்திரவாதங்களை தர முடியாவிட்டால், தயவுகூர்ந்து வலைதளத்தில் குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள் ஆகியவற்றை பங்களிக்க வேண்டாம்.
  6. (e) வலைதளத்தில் பங்களிக்கப்படும் குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களுக்கான முழு பொறுப்பும் பயனர்களை சார்ந்தது தான்.
  7. (f) குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை பொது தரவுதளத்தில் கிடைக்கச் செய்வதற்கான உரிமை பாஷினி (Bhashini)க்கு இருக்கிறது. CC0 1.0 Universal (CC0 1.0) Public Domain Dedication என்பதன் கீழ் குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள் கிடைக்கும். நீங்கள் உங்களுடைய குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள் ஆகியவற்றை வலைதளத்தில் பதிவேற்ற முடிவு செய்தால், CC0 1.0 Universal (CC0 1.0) Public Domain Dedication என்பதன் கீழ் உங்களுடைய குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை பொதுவெளியில் பகிர்வதற்கு நீங்கள் பாஷினி (Bhashini)க்கு ஒப்புதல் வழங்குவதாக கருதப்படும்.
  8. (g) குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை முன்கூட்டியே திரையிடவோ அல்லது மதிப்பாய்வு செய்யவோ பாஷினி (Bhashini)க்கு உரிமை உண்டு. மேலும், நோக்கத்தை நிறைவு செய்யாத எந்தவொரு குரல் பதிவு, படியெடுக்கப்பட்ட உரை, மொழிபெயர்க்கப்பட்ட உரை மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படத்தையும் நிராகரிக்கும் அல்லது நீக்கும் உரிமையும் பாஷினி(Bhashini)க்கு இருக்கிறது.
  9. (h) குரல்பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை பொதுவெளியில் பகிர்ந்த பிறகு, அந்த குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களின் பயன்பாடு தொடர்பான அனைத்து ஆபத்துகளையும் பயனர் ஏற்கிறார். அவற்றின் துல்லியம், முழுமை அல்லது பயன்பாட்டின் மீதான பொறுப்புறுதியும் இதில் அடங்கும்.
3. பயனர் தகவல் மற்றும் தனியுரிமை:
குரல் பதிவுகள், படியெடுத்த உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை பங்களிப்பதற்கு பயனர்கள் எந்தவொரு தனிப்பட்ட தகவல் அல்லது நுண்ணிய தகவல்களையும் வழங்க வேண்டியதில்லை. இந்த வலைதளம் அத்தகைய தகவல்களை சேகரிப்பதும் இல்லை. வயது, பாலினம், தாய்மொழி போன்ற மக்கள்தொகை பண்புகள் குறித்த தகவல்களை வழங்குவது அவரவர் விருப்பத்தை சார்ந்தது. நீங்கள் இந்த வலைதளத்தில் எந்தவிதமான மக்கள்தொகை பண்புகள் குறித்த தகவல்களை வழங்கினாலும், தனியுரிமை கொள்கையின் படி அந்த தகவலை சேகரிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் ஒப்புக் கொள்வதாக கருதப்படும். பயனரின் தோராயமான இருப்பிடத்தை, அதாவது மாநிலத்தை நிர்ணயிக்கும் வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்காக அவரது இணைய நெறிமுறை (IP) முகவரி ஒருமுறை சேகரிக்கப்படுகிறது. இந்த இணைய நெறிமுறை (IP) முகவரி சேமிக்கப்படுவதில்லை மற்றும் ஒரு பயனரின் துல்லியமான இருப்பிடத்தை நிர்ணயிக்கவும் முடியாது.
4. கொள்கை மாற்றங்கள்:
இந்த விதிமுறைகள் (பிற வலைதள கொள்கைகள் உட்பட) அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம் அல்லது மாற்றியமைக்கப்படலாம், திருத்தப்பட்ட விதிமுறைகள் இங்கு வெளியிடப்படும். இந்த வலைதளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது, அதன் அப்போதைய விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு சமானம். எனவே, அவ்வப்போதைய மாற்றங்களை மதிப்பீடு செய்வதற்காக இந்த பக்கத்தை அடிக்கடி பார்வையிடுவதற்கு உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எங்களுடைய சமீபத்திய புதுப்பிப்பை எப்போது செய்தோம் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, மாற்றப்பட்ட விதிமுறைகள் பயன்பாட்டுக்கு வரும் தேதியை இந்த பக்கத்தின் மேற்பகுதியில் பதிவு செய்துவிடுவோம்.
5. பொறுப்பு துறப்பு:
இந்த வலைதளம் உள்ளது உள்ளபடியே பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. மேலும், “வியாபாரம்”, “ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கான தகுதி” மற்றும் “வரம்பு மீறாமை” போன்றவற்றுக்கு எந்தவிதமான சான்றோ அல்லது சட்டரீதியான உத்திரவாதமோ வழங்கப்படுவதில்லை. இந்த வலைதளத்தை பயன்படுத்துவது மற்றும் குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை பங்களிப்பதன் மூலம், வலைதளத்தை பயன்படுத்த இயலாமை அல்லது விதிமுறைகளின் காரணமாக எழும் கோரிக்கைகளுக்கு பாஷினி (Bhashini) எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். பாஷினி (Bhashini) குறிப்பாக பின்வரும் நிகழ்வுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதில்லை: மறைமுகமான, குறிப்பிட்ட, தற்செயலான, விளைவு சார்ந்த அல்லது முன்மாதிரியான சேதங்கள், நல்லெண்ண இழப்பு, வேலை நிறுத்தம், இலாப இழப்பு, தகவல் இழப்பு அல்லது கணினி செயலிழப்பு. மேலும் இந்த வலைதளத்தை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பங்களிக்கும் குரல்பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களின் விளைவாக வரும் எந்தவொரு பொறுப்பு அல்லது உரிமை கோரலுக்கும் இழப்பீடு வழங்க வேண்டியது உங்கள் கடமை என்றும் இதனால் பாஷினி (Bhashini)க்கு எந்தவிதமான தீங்கும் நேராது என்றும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்.
6. வரம்பு மீறல்:
வலைதளத்தில் இருக்கும் ஏதோ ஒன்று, காப்புரிமை அல்லது வர்த்தக முத்திரை உரிமை உள்ளிட்ட உங்களுடைய தனியுரிமை அல்லது அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக நீங்கள் நினைத்தால், அத்தகைய வரம்பு மீறல் விவரங்களோடு மற்றும் உங்கள் தொடர்பு விவரங்களை இணைத்து contact.bhashini@digitalindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
7. முடிவு நிலை:
  1. (a) இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மீறும் பட்சத்தில், நீங்கள் வலைதளத்தை பயன்படுத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்படலாம் அல்லது இடைநிறுத்தப்படலாம். எந்தவொரு காரணத்துக்காகவும், எந்த நேரத்திலும், யாருடைய வலைதள அணுகலையும் ரத்து செய்வதற்கோ அல்லது இடைநிறுத்துவதற்கோ பாஷினி (Bhashini)க்கு உரிமை இருக்கிறது.
  2. (b) உங்களுடைய அணுகல் ரத்து செய்யப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட பிறகும் நீங்கள் பங்களித்த குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள் தொடர்ந்து பொது வெளியில் கிடைக்கும்.
8. கட்டுப்படுத்தும் சட்டம்:
இந்த விதிமுறைகள் அனைத்தும் இந்திய சட்டத்தின்படி நிர்வகிக்கப்படும் மற்றும் கட்டுப்படுத்தப்படும். இந்த விதிமுறைகளின் கீழ் எழும் எந்தவொரு சர்ச்சையும் இந்தியாவின் புதுதில்லி நீதிமன்றங்களின் பிரத்யேக அதிகார வரம்புக்கு உட்பட்டது.

தனியுரிமைக் கொள்கை

நடைமுறைக்கு வரும் தேதி: 1st ஜூலை 2022

நாங்கள் உங்களுடைய தனியுரிமைகளை மதிக்கிறோம் மற்றும் எங்களுடைய பயனர்களின் தனியுரிமைகளை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த தனியுரிமை கொள்கையை தயவுகூர்ந்து கவனமாக படிக்கவும். இதன்மூலம், இந்த வலைதளம் உங்களுடைய தகவல்கள் மற்றும் தரவுகளை எந்தெந்த விதங்களில் பயன்படுத்துகிறது மற்றும் பாதுகாக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். இந்த தனியுரிமை கொள்கை பயனர்களிடமிருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் மற்றும் தரவுகளை உள்ளடக்கியது. இங்கு பயன்படுத்தப்படும் “நீங்கள்” மற்றும் “உங்களுடைய” எனும் வார்த்தைகள் வலைதள பயனர்களை குறிக்கும்.

இந்த வலைதளத்தைப் பயன்படுத்துவது மற்றும் இந்த தளத்துக்கு உங்களுடைய தகவல்களை வழங்குவதன் மூலம், பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் இந்த தனியுரிமை கொள்கையின்படி வலைதளத்தில் நீங்கள் வெளிப்படுத்தும் தகவலை சேகரித்து பயன்படுத்துவதற்கு நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இந்த கொள்கையின் உள்ளடக்கங்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயவுகூர்ந்து இந்த வலைதளத்தை அணுகவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம்.

இந்த தனியுரிமை கொள்கையானது பயன்பாட்டு விதிமுறைகளுடன் இணைந்து படிக்கப்பட வேண்டும். இங்கு வரையறுக்கப்படாத, ஆனால் பயன்படுத்தப்படும் வரையறுக்கப்பட்ட சொற்கள் பயன்பாட்டு விதிமுறைகளில் அவற்றிற்கு குறிப்பிடப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும்.

1. நாங்கள் சேகரிக்கும் தரவுகள், அவை பயன்படுத்தப்படும் விதம் மற்றும் அணுகக்கூடிய நபர்கள்:
உங்களுடைய தகவல்கள் மற்றும் தரவுகளை இந்த வலைதளத்தில் சேகரிப்பதும், சேமிப்பதும், செயலாக்கம் செய்வதும் ஒருகுறிப்பிட்ட நோக்கத்துடன் இணைந்த சட்டப்பூர்வமான நோக்கத்துக்காக என்பதை நீங்கள் புரிந்து, ஏற்றுக் கொள்வதோடு அதனை அங்கீகரிக்கவும் செய்கிறீர்கள். நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் மற்றும் தரவுகளின் வகைகள், அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் யாரெல்லாம் அவற்றை அணுக முடியும் என்பது போன்ற தகவல்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
  1. (a) குரல் பதிவுகள்: பயனர்கள் தங்களுடைய குரல் பதிவுகளை வலைதளத்துக்கு பங்களிக்க விரும்பலாம். இந்த குரல் பதிவுகள் பேச்சை எழுத்தாக மாற்றும் (speech-to-text) தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. குரல் பதிவுகள் மற்றும் உங்கள் மாநிலத்தின் பெயர், நீங்கள் சுயவிருப்பத்துடன் தெரிவிக்கும் மக்கள்தொகை பண்புகள் சார்ந்த மீ தரவு(meta data)களான உங்கள் வயது, பாலினம் மற்றும் தாய்மொழி ஆகிய தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பொது நுகர்வுக்காக CC0 1.0 Universal (CC0 1.0) Public Domain Dedication. உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். ஒரு பயனரை அல்லது அவரது குரலை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட மீ தரவுகள் (meta data) எதுவும் குரல் பதிவுகளுடன் சேகரிக்கப்பட மாட்டாது அல்லது வெளியிடப்பட மாட்டாது.
  2. (b) படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள்: பயனர்கள் இந்த வலைதளத்துக்கு படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்டபடங்களை பங்களிக்க விரும்பலாம். படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள் ஆகியவை எழுத்துகளை பேச்சாக மாற்றுவது(Text-to-Speech), இயந்திர மொழிபெயர்ப்பு(Machine Translation) மற்றும் ஒளியியல் எழுத்துருக்களை அடையாளம் காண்பது(Optical Character Recognition) மற்றும் பேச்சை எழுத்தாக மாற்றும் (Speech-to-Text) தொழில்நுட்பம் மற்றும் கருவிகளின் உருவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும்.
  3. (c) தனிப்பட்ட மீ தரவு மற்றும் தகவல்கள்: இந்த வலைதளம் பயனர்களிடம் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் அல்லது நுண்ணிய தகவலையும் வேண்டுவதில்லை. வலைதளத்தை பபயன்படுத்துவதற்காகவோ அல்லது குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை பங்களிப்பதற்காகவோ நீங்கள் எந்த கணக்கையும் உருவாக்க வேண்டிய அவசியமில்லை. பயனர்பெயர்(username) குறித்த தகவலை மட்டும் வழங்குவது குறித்து நீங்கள் தீர்மானிக்கலாம், இது குக்கிகளுடன் இணைந்து பயனரின் தனித்துவத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே பயன்படும். இது உங்களுடைய மக்கள்தொகை பண்பு (Demographic) மற்றும் ஊடுவினை (Interaction) குறித்த மீ தரவுடன் (metadata) தொடர்புடையது. உங்களுடைய பயனர்பெயர்(username) பொது வெளியில் பகிரப்பட மாட்டாது.
  4. (d) மக்கள்தொகை பண்புகள் (Demographic) குறித்த மீ தரவு: உங்களுடைய வயது, பாலினம் மற்றும் தாய்மொழி போன்ற தகவல்களை நீங்கள் விரும்பினால் வலைதளத்தில் பதிவு செய்யலாம். உங்களுடைய தோரயமான இருப்பிடத்தை, அதாவது உங்கள் மாநிலத்தை கண்டறிவதற்காக உங்கள் இணைய நெறிமுறை (IP) முகவரி ஒரே ஒருமுறை மட்டும் சேகரிக்கப்படும். இந்த இணைய நெறிமுறை (IP) முகவரி சேமிக்கப்பட மாட்டாது, மற்றும் எந்தவொரு பயனரின் துல்லியமான இருப்பிடத்தையும் கண்டறிய முடியாது. தரவுதள களஞ்சியத்தில் உள்ள பேச்சாளர்களின் மக்கள்தொகை பரவல் குறித்து புரிந்துகொள்வதற்கும், பேச்சை எழுத்தாக மாற்றும் (Speech-to-Text) தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் பாஷினி (Bhashini) மற்றும் பிற ஆராய்ச்சியாளர்களுக்கு இது உதவும். ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பெயரிடப்படாத மக்கள்தொகை தகவல்கள் பகுப்பாய்வு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் மற்றும் பொதுமக்களிடம் பகிரப்படலாம். தனிப்பட்ட மக்கள்தொகை தகவல்கள் பொது வெளியில் பகிரப்பட மாட்டாது.
  5. (e) ஊடுவினை (Interaction) தகவல்கள்: குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை பங்களித்த பெயர் அறியப்படாத பயனர்களின் தனித்துவத்தை கண்டறிவது, நீங்கள் பங்களித்த குரல்பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களின் எண்ணிக்கை, பொத்தான்கள் (buttons) மற்றும் பட்டியல்(menu)களுடனான தொடர்பு மற்றும் அமர்வின் கால நீட்சி (session length) போன்ற அடையாளம் காணப்படாத தகவல்களை கண்டறிவதற்காக குக்கிகளை பயன்படுத்தலாம். பெயர் தெரியாத பயனர்களை அடையாளம் காண்பதற்காகவும், அதன்மூலம் நீங்கள் வலைதளத்தை மீண்டும் பார்வையிடும்போது ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதற்காகவும் குக்கிகள் வலைதளத்தில் சேமிக்கப்படும். தரவுதொகுப்பில்(dataset) பங்களித்த நுகர்வோர்களின் கலப்பற்ற, ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள்தொகை பண்புகள் குறித்த கோணத்தில், சில சமயங்களில் ஒரு தனித்துவமான பேச்சாளரை அவரது குரலின் மூலம் அடையாளம் காண்பதற்காகவும் இது பயன்படுத்தப்படலாம். உங்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் நீங்கள் குக்கிகளை நீக்கி விடலாம்.
  6. (f) தொழில்நுட்ப தகவல்கள்: நீங்கள் பதிவு செய்த அல்லது கேட்ட குரல் பதிவுகளின் எண்ணிக்கை, பொத்தான்கள் (buttons) மற்றும் பட்டியல்(menu)களுடனான தொடர்பு மற்றும் அமர்வின் கால நீட்சி (session length) போன்ற அடையாளம் காணப்படாத தகவல்களை கண்காணிப்பதற்காக நாங்கள் குக்கிகளை பயன்படுத்த நேரிடலாம். நீங்கள் பார்வையிடும் வலைதளங்களின் இருப்பிட குறியீடுகளையும் (URL) மற்றும் தலைப்புகளையும் நாங்கள் சேகரிக்கிறோம். வலைதள அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக, உலாவி வகை (browser type) மற்றும் பதிப்புரு (version), காட்சித்துறை அளவு (viewport size) மற்றும் திரை பிரிதிறன் (screen resolution) போன்ற தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம். இதன்மூலம் மக்கள் வலைதளத்துடன் தொடர்பு கொள்ளும் விதம் குறித்து புரிந்துகொள்ள முடிகிறது, இந்த புரிதல் வலைதளத்தை மேம்படுத்த உதவுகிறது. எங்களுடைய வலைதளம் உங்களுக்கு சரியானதுதானா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக உங்களுடைய இருப்பிடம்(location) மற்றும் மொழி தேர்வுகளையும்(language preference) நாங்கள் சேகரிக்கிறோம்.
2.உங்களுடைய தரவுகளின் சேமிப்பு:
உங்களுடைய தரவுகள் மின்னணு வடிவில் க்ளவுடில் (cloud) சேமிக்கப்படும். உங்களுடைய தகவல்கள் அல்லது தரவுகளை சேமிப்பதற்கும், செயலாக்கம் செய்வதற்கும் பாஷினி (Bhashini) மூன்றாம் தரப்பினருடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். இந்த மூன்றாம் தரப்பினர் உங்களுடைய தகவல்கள் அல்லது தரவுகளை பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு தரநிலைகளைக் கடைபிடிப்பார்கள். மேலும், அந்த மூன்றாம் தரப்பினர் உங்களுடைய தகவல்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பதற்கு நியாயமான பாதுகாப்பு தரநிலைகளைக் பின்பற்ற வேண்டும் என்று பாஷினி (Bhashini) அவர்களை வலியுறுத்தும்.
3. தகவல் பாதுகாப்பு மற்றும் இடர்காப்பு:
  1. (a) நாங்கள் தெரிந்தே எந்தவொரு தனிப்பட்ட தகவல் அல்லது நுண்ணிய தகவல்கள் மற்றும் தரவுகளை சேகரிப்பதில்லை. இருப்பினும் வலைதளத்தை பயன்படுத்தும்போது, அங்கு குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்கள், பயனர் பெயர் மற்றும் சில மக்கள்தொகை பண்பு குறித்த தகவல்களை வழங்குவதற்கு நீங்கள் விரும்பலாம். உங்களுடைய தகவல்கள் மற்றும் தரவுகள் அனைத்தும் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்படும். கூடுதலாக, வலையமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு, பாதுகாப்பான கொள்குழி அடுக்கு சான்றிதழ்கள் (secure socket layer certificates), குறியாக்கம்(encryption) மற்றும் கைமுறை பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் உங்களுடைய தகவல்கள் மற்றும் தரவுகளை சேதம் அல்லது இழப்பிலிருந்து பாதுகாப்பதற்கும், அவற்றின் துல்லியத்தன்மையை பாதுகாப்பதற்கும், அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது முறையற்ற பயன்பாட்டை தவிர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  2. (b) உங்கள் தகவல்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பதற்காக, திருத்தங்களுக்கு உட்பட்ட 2000-ஆம் வருடத்தின் (இந்திய) தொழில்நுட்ப சட்டம் , மற்றும் 2011-ஆம் வருடத்தின் (இந்திய) தொழில்நுட்ப (Reasonable Security Practices and Procedures and Sensitive Personal Data or Information) விதிகளின் கீழ் நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம்.
  3. (c) பாதுகாப்பான கொள்குழி அடுக்கு சான்றிதழ்கள் போன்ற தகுந்த நடைமுறைகளை பயன்படுத்தி உங்களுடைய தகவல்கள் மற்றும் தரவுகளை பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்தாலும், உங்களுடைய தகவல்கள் எங்கள் தளத்துக்கு அனுப்பப்படும் போது, அவற்றின் பாதுகாப்புக்கு எங்களால் உத்திரவாதம் அளிக்க முடியாது; எந்தவொரு பரிமாற்றமும் உங்கள் சொந்த அபாயங்களுக்கு உட்பட்டது. நாங்கள் உங்களுடைய தகவல்கள் மற்றும் தரவுகளை பெற்றவுடன், இந்திய சட்டப்படி அவற்றின் அங்கீகரிக்கப்படாத அணுகலை தடுப்பதற்கான நியாயமான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எங்களிடம் இருக்கின்றன.
4. சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்துடன் இணங்குதல்:
  1. (a) சட்டத்தை அமல்படுத்துவதற்கும், இணங்குவதற்குமான தற்போதைய நடைமுறை சட்டத்தின் கீழ்வரும் எந்த உத்தரவுக்கும் ஏற்ப, பாஷினி (Bhashini) அரசாங்கங்கள் மற்றும் சட்ட அமலாக்க முகவர்கள் அல்லது மூன்றாம் தரப்பினருடன் ஒத்துழைக்கிறது.
  2. (b) அரசாங்கம் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது தனியார் தரப்பினர் தங்களுடைய சொத்து அல்லது உரிமைகளை பாதுகாப்பதற்கும், உரிமை கோரல் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கும், பொது பாதுகாப்பு அல்லது தனிநபர் பாதுகாப்புக்கும், சட்டவிரோதமான அல்லது நெறிமுறையற்ற அல்லது சட்டபூர்வமாக செயலாற்றக்கூடிய நடவடிக்கைகளை தடுப்பதற்கும் உங்களைப்பற்றிய தகவல்கள் அவசியம் என்று பாஷினி (Bhashini) நம்பினால், உங்களைப்பற்றிய எந்த தகவலும் பாஷினி (Bhashini)யின் விருப்பத்தின்படி மேற்கூறிய நபர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுடைய தகவல்கள் அல்லது தரவுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் வேண்டும் பட்சத்தில் அவர்களுக்கும் வழங்கப்படும்.
  3. (c) இந்த வலைதளத்தை உலகின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் அணுக முடியும் என்பதையும், அதற்கு உலகம் முழுவதிலும் பயனர்கள் இருக்கின்றனர் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவே, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசாங்கங்கள், நீதித்துறைகள் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்த வலைதளத்தின் மீது அதிகாரம் செலுத்தலாம். மேலும் இந்த வலைதளம் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், நகராட்சிகள் அல்லது மாகாணங்களின் சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் தீர்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம். மேற்கூறிய பகுதிகளில் உங்களுடைய தகவல்களையோ அல்லது தரவுகளையோ சேமித்து வைப்பதற்கோ, பயன்படுத்துவதற்கோ, செயலாக்கம் செய்வதற்கோ அல்லது சேகரிப்பதற்கோ இந்த வலைதளத்துக்கு நேரடி அதிகாரம் இல்லாமலும் இருக்கலாம். உங்களுடைய தகவல்கள் அல்லது தரவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகள் உங்கள் தகவல்கள் அல்லது தரவுகளை மறையீடு நீக்கம் (decrypt) செய்வதற்கும், சேகரிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் உரிமை இருக்கிறது என்பதையும், அத்தகைய நடவடிக்கைகள் பாஷினி (Bhashini)யின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். அத்தகைய செயல்களுக்கு பாஷினி (Bhashini) எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
5.உங்களுடைய தகவல்களை நீக்கம் செய்வது:
நீங்கள் வழங்கிய ஒரு தகவலை நீக்க விரும்பினால், contact.bhashini@digitalindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் . நீங்கள் குறிப்பிட்டும் ஒரு தரவு அல்லது தகவல், அதை கோரும் பயனரின் தனிப்பட்ட தகவலாக அடையாளம் காண முடியாமல் போனாலோ அல்லது பொருந்தக்கூடிய சட்டம், சட்ட அமலாக்க கோரிக்கைகள் அல்லது நீதித்துறை நடவடிக்கைகளின் கீழ் தேவைப்படலாம் என்ற காரணத்தினாலோ, அதை நீக்குவது தடைசெய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அவை நீக்கப்படாமல் போகலாம் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பதிப்புரிமை மற்றும் உரிம அறிவிப்பு

குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களுடன், சுயவிருப்பத்துடன் பதிவு செய்யப்படும் எல்லாவிதமான மக்கள்தொகை பண்பு குறித்த தரவுகளும் பொது நுகர்வுக்காக வலைதள தரவுதளத்தில் CC0 1.0 Universal (CC0 1.0) Public Domain Dedication கீழ் பயன்படுத்தப்படும்.

குரல் பதிவுகள், படியெடுக்கப்பட்ட உரைகள், மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் மற்றும் முகப்பு அடையாளம் இடப்பட்ட படங்களை உருவாக்குவதற்காக வலைதளத்தில் வழங்கப்படும் உரை தூண்டிகள் (text prompts), படங்கள்(images) மற்றும் ஒலி துணுக்குகள் (audio clips) பின்வரும் திறந்த மூல தரவுதளங்களில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றன:-